ஜிப்மர் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை 21ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது
காலையில் 10 மணி முதல் 12.30 மணிவரை நடக்கும் தேர்வில் பங்கேற்க வேண்டியவர்கள் காலையில் 7.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும்
மதியம் 3 மணிக்கு தொடங்கி மாலை 5.30 வரை நடக்கும் தேர்வில் பங்கேற்போர் மதியம் 2.30க்குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்
தேர்வில் 200 கேள்விகள் இடம் பெறும். ஆங்கில மொழியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு கட்ஆப் பட்டியல் வெளியாகும்
தேர்வு எழுதியவர்கள் ஆன்லைன் மூலம் ரேங்க் பட்டியலை பெற்றுக்கொள்ள முடியும். இதையடுத்து ஜூன் 27ம் தேதி கவுன்சலிங் தொடங்கும்
இதற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் நிர்வாகம் செய்து வரும் நிலையில் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வரும் 21ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது