டான்செட் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு! அண்ணா பல்கலை. அறிவிப்பு


டான்செட் நுழைவு தேர்வை ஜூன் 1ம் தேதி மாற்றியமைத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

எம்.இ, எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ ஆகிய முதுநிலை படிப்பில் சேருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் டான்செட் என்ற நுழைவுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது

இதன் மூலம் பிஇ படித்த மாணவர்களும், பிஎஸ்சி, பிபிஏ படித்த மாணவர்கள் எம்சிஏ எம்பிஏ படிக்கவும் டான்செட் எழுதி கல்லூரியில் சேரலாம்

இந்நிலையில், இந்தாண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு வரும் மே 20ம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனால், அதே நாளல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், மே19ம் தேதி டான்செட் தேர்வை மாற்றியமைத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது

இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 530 இன்ஜீனியரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டதால், தற்போது டான்செட் தேர்வு தேதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதி டான்செட் தேர்வுகள் நடைபெறும் என்றும் இதற்கான ஹால்டிக்கெட்டுக்களை மாணவர்கள் இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

டான்செட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட்டை https://www.annauniv.edu/tancet2018என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்