முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (மே 26) நடைபெற உள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மே 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அரசு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 24-ஆம் தேதி நிறைவடைந்தது.