தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வில் அரசுப் பள்ளிகள் 100விகித தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் 94.26 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் 93.98 சதவிதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் 93.90 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.