பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளில் மாணவர்களின் விவரங்கள் இணைக்கப்படும்: செங்கோட்டையன் தகவல்


பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், இரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்

மேலும் மாணவர்களின் வருகைப்பதிவு மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்துவிடும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் செயல்படுத்தப்படும் எனவும், இது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்