விளையாட்டு துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விருது,கல்பனா சாவ்லா விருதுகள் வழங்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளையாட்டு துறையில் சிறப்பாக பங்களித்து, தேசத்திற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு, மத்திய அரசு ஆண்டுதோறும், பத்ம விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட பத்ம விருதுக்கான விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு, வரும், 30ம் தேதிக்குள்ளும், மாவட்ட விளையாட்டு நல அலுவலருக்கு, வரும், 26ம் தேதிக்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும்.அதேபோல, கல்பனா சாவ்லா விருது விண்ணப்பங்களை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு, வரும், 20ம் தேதிக்குள்ளும், மாவட்ட விளையாட்டு நல அலுவலருக்கு, வரும், 15ம் தேதிக்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும் என, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்அறிவித்துள்ளது.