இனி தனியார் மருத்துவமணையில் இலவச சிகிச்சை ! அரசு அதிரடி உத்தரவு..!


தனியார் ஆஸ்பத்திரிகளில் 48 மணி நேர இலவச சிகிச்சை

விபத்தில் சிக்குபவர்களை அருகில் உள்ள தனியார், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அவர், ஏழையா, பணக்காரரா? என்று பார்க்காமல் 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். முதலில் அதற்குரிய கட்டணத்தை அரசு செலுத்தும். அதன் பிறகு அந்த பணம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விபத்தில் சிக்குபவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் போது அதற்கும் பணம் வசூலிக்கக்கூடாது என்றும் பினராயி விஜயன் கூறினார்.

.

தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பவர்களின் உடலை பணத்தை கட்டினால்தான் உறவினர்களிடம் ஒப்படைப்போம் என்று கூறினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*இந்தியாவிலேயே முதல் முறையாக உயிரை காக்க கேரள அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.*