தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கவிருக்கும் 10ம் வகுப்பு தேர்விற்கு தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கவிருக்கும் 10ம் வகுப்பு தேர்விற்கு தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை : தமிழகத்தில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார், மேலும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையையும் வெளியிடப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்த தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது, தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi