COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- போட்டித்தேர்வு இலவச பயிற்சி: 18ல் இணையதளத்தில் துவக்கம்
போட்டித்தேர்வு இலவச பயிற்சி: 18ல் இணையதளத்தில் துவக்கம்
தமிழ்க்கடல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. தற்போது, கொரோனா ஊரடங்கால், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. போட்டியாளர்கள் வீட்டில் இருந்தபடியே, தேர்வுக்கு தயாராகி வருகின்ற நிலையில், கிராமப்புற மாணவர்கள், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள ஆன்லைனில் பயிற்சி அளிக்க உரிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. https://tamilnadu careerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழி கற்றல், மின்னணு பாட மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண், வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து, போட்டித்தேர்வு என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வு செய்து, அதில் வரும் பாடக் குறிப்புகளை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வை ஆன்லைனில் எழுதலாம். இப்பயிற்சி வகுப்புகள் வரும், 18 முதல், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம், துவக்கப்பட உள்ளன. விபரங்களுக்கு, 04286 - 222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
Subscribe via Email
Related Post
- மொத்தமாக எல்லாமே மாறப்போகுது.. பள்ளிக்கல்வியில் மெகா மாற்றம்? அன்பில் மகேஷ் உத்தரவு
- தமிழ்நாட்டுக்கென தனித்துவமான கல்விக் கொள்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
- ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்: தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- செய்முறை தேர்வு! பிளஸ் 2 மாணவர்களுக்கு 154 மையங்களில்... கொரோனா கட்டுப்பாடுகளோடு நடத்த ஏற்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "போட்டித்தேர்வு இலவச பயிற்சி: 18ல் இணையதளத்தில் துவக்கம்"
Post a Comment