
மழைக்காலத்தில் அழகாக திகழவும் , பிரச்சனை இல்லாத சருமத்தைப் பெறவும் உதவும் ஒரு ஃபேஸ் பேக்கு இது .வீட்டில் இதை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம். இதற்கு பெயர் ஓட்ஸ் மற்றும் முட்டை மாஸ்க்.
தேவைப்படும் பொருட்கள்:
ஓட்ஸ் – 3 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு – 1
தேன் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 டீஸ்பூன்
இதனை செய்யும் முறை:
முதலில் ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை போட்டு கொள்வது நல்லது.
0 Comments