செலரி மனித உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் பலன் தருவதால் பலரும் இதை விரும்பி எடுத்து கொள்கிறார்கள். மேலும் இந்த செலரி நாள்பட்ட வியாதிகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது.
இந்த செலரியில் கலோரிகள் எதுவும் இல்லை. இதில் வெறும் தண்ணீர் மட்டுமே உள்ளது. அதனால் இந்த செலரியை ஜூஸ் போட்டு தினமும் காலையில் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியாக வைத்து வேலைகளை விரைவில் முடிக்க இந்த செலரி உதவுகிறது. மேலும் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மேலும் கெட்ட கொழுப்புகள் இருந்தால் கரைத்துவிடும்.

அதேப்போல் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும்.அதேபோல் சருமம், உடல் மற்றும் தலைமுடி என அனைத்திற்கும் சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. அதேப்போல் இதில் வைட்டமின்கள் அதிகளவில் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தினமும் காலையில் உணவிற்கு அரை மணி நேரம் முன்போ அல்லது உணவு சாப்பிட பிறகு அரை மணி நேரம் கழித்தோ குடிக்கலாம்.
0 Comments