சருமத்தில் சுருக்கம், கோடுகள், கருவளையம் போன்ற பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்போது முகத்தின் அழகு பாதிப்புக்குள்ளாகும். சருமத்திற்கு பளபளப்பு ஏற்படுத்திகொடுக்கும் தன்மை அத்திப்பழத்திற்கு உண்டு. எப்போதும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். மெலனின் உற்பத்தியை குறைத்து சரும அழகை பேணிக்காக்கவும் வழிவகை செய்யும்.

சருமத்தில் திட்டுக்கள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அத்திபழத்தை பயன்படுத்தலாம். அத்தி பழம் ஒன்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பின்னர் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் மென்மையாக தடவிவிட்டு உலர்ந்ததும் நீரில் கழுவி விடவும். வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் சருமம் பிரகாசிக்க தொடங்கும்.