நன்னாரி வேர்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேர் நம் உடலில் சிறுநீர் நன்றாக வெளியேறவும், வியர்வையை அதிகரித்து உடல் உஷ்ணத்தையும் தணிக்கிறது.

குழந்தைகளுக்கு பாலில் நீரில் ஊறவைத்த நன்னாரி வேர்ப்பட்டையை போட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஊக்கம் கிடைக்கும். மேலும் இருமல், கழிசல் ஆகியனவும் நிற்கும்.

முதலில் வாழை இலை எடுத்து அதற்கு நன்னாரி வேர் வைத்து கட்டி அதை எரித்து சாம்பல் எடுத்து அதனுடன் சீரகம் மற்றும் சர்க்கரையை ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்து கலந்து நீராக குடித்த சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

பித்தம், மனக்கோளாறுகள், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நீரில் நன்னாரி வேர் பொடி மற்றும் அதே அளவு கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால் போதும்.

விஷ கடிகளால் ஏற்படும் பக்க விளைவுகளை சரிசெய்ய கற்றாழை சோறுடன் இந்த நன்னாரி வேர் பொடியை கலந்து சாப்பிட்டால் போதும்.

வெண்ணெய்யில் அரை கிராம் வேர் சூரணம் கலந்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள குஷ்டம் சரியாகும். அதேபோல் நன்னாரி பொடியை தேனில் கலந்து சாப்பிட காமாலை சரியாகும்.