கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.

இந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவை செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களை பெறலாம்.

கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

கைக்குத்தல் அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21% இருக்கிறது. மேலும், மெக்னீசியத்தால், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தினை உறிஞ்சுகிறது.

மெக்னீசியம் நிறைந்த கைக்குத்தல் அரிசி, ஆஸ்துமாவைக் குறைக்கிறது. பல ஆய்வுகள், கைக்குத்தல் அரிசியில் உள்ள மெக்னீசியம், நோயாளிகளிடம் உள்ள ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமவிற்கு எதிரான நன்மை தரும்.