முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது. முட்டைக் கருவில் உள்ள ‘ஸிக்ஸாந்தின்’ புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.

பச்சைக் கீரை வகைகளில் அதிகம் வைட்டமின் சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.

மாம்பழம், ஆரஞ்சு, காரட், எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும். தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

காலிஃளாரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது. ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் காலிஃளாரை விரும்பி உண்பார்கள்.

நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும், இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும். ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.