
மழைக்காலம், பனிக்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, தொய்வு, இருமல் முதலிய நோய்களுக்கு மொசுமொசுக்கை நல்ல மருந்து. இருமல், ஈளை, இரைப்பு, புகையிருமல், மூக்கால் நீர்பாய்தல் (பீனிசம்) என்பன மொசு மொசுக்கையால் தீரும். மழை, பனிக்காலங்களில் மூட்டு, தொய்வு, இருமல் போன்றவற்றால் வருந்துபவர்கள் மட்டுமன்றி ஏனையோரும் மொசுமொசுக்கை இலையைத் தமது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நன்மை பெறலாம்.
புழுங்கலரிசியை நன்கு ஊறவைத்து அதனுடன் சுத்தப்படுத்திய மொசு மொசுக்கை இலை சிறிதளவு மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு என்பவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். இந்த மாவைத் தோசைக்கல்லில் சிறிது நெய்தடவி, அடையாகச் சுட்டுச் சாப்பிட்டுவர கோழைக்கட்டு, இருமல், தொய்வு முதலியன நீங்கும் என்று மூலிகை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
0 Comments