கிராமப்புறங்களில் இன்றும் கம்பங்களியும், கம்பங்கூழும் வெகு பிரசித்தம். இது, தாய்ப்பாலைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். தானிய வகைகளில் கம்பில்தான் 11.8 சதவிகிதம் அளவுக்கு புரோட்டின் உள்ளது. ஆரோக்கியமான தோலுக்கும் தெளிவான கண்பார்வைக்கும் உகந்தது. 100 கிராம் கம்பில், 12 மி.கி இரும்புச்சத்து, 42 கிராம் கால்சியம், 0.38 மி.கி, வைட்டமின் பி 11 ஆகியவை நிறைந்துள்ளன.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து, பருமனைக் குறைக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். இரவு வேலைக்குச் செல்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் காலை, மதிய வேளைகளில் கம்பை உணவாக எடுத்துக்கொண்டால், உடல் வலுவடையும்.
0 Comments