சீரகத்தில் தேவையான அளவு இரும்புச்சத்து இருப்பதால், இரத்த அணுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.

சீரக விதையிலுள்ள ஒரு வித எண்ணெய், அலெர்ஜி எதிர்ப்பு பண்பாகவும், ஆக்சிஜனேற்ற பண்பாகவும் செயல்படுகிறது. இதனால் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.

உடல் பருமன் பிரச்சனை பல வித உபாதைகளை உண்டாக்கக்கூடியது. அவற்றுள் இதய நோய், சர்க்கரை வியாதி மற்றும் கீல்வாதம் ஆகியவையும் அடங்கும். ஒரு சிலர் தன்னுடைய உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள் செய்வர். ஒரு சிலரோ உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பர்.

ஒருவேளை உங்களுக்கு உடற்பயிற்சி செய்யவோ, உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கவோ பிடிக்காது என்றால், கவலை வேண்டாம். கையில் எடுங்கள் இந்த சீரகத்தை. ஆம், சீரகம் உங்களுடைய உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. சீரகத்தோடு, சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து எடுத்துக்கொள்ள பசியின்மை நீங்கும்.

#சீரகத்தில்_உள்ள_மருத்துவ_பயன்கள்