தீக்காயங்களை / தோல் புண்களையும் ஆற்றும் கிறுமி நாசினித் தன்மையுடையது. இரைப்பையில் ஏற்படும் புண்களுக்கு சித்த மருத்துவம் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் துணை மருந்தாகவும், நேரடி சிகிச்சையிலும் தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. மருத்துவ ஆலோசனைக்குப் பின், வில்வப்பொடியுடன், 1 தேக்கரண்டி தேன் சேர்த்து உணவுக்கு முன் எடுத்துவர நல்ல குணம் உண்டு.

இரத்த சோகை உடையோர், குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோக்ளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது. இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும், கொலஸ்டிரால் குறையவும் தினசரி தேன் மிக உதவியாக இருக்கிறது.