நம்மில் பலருக்கு காபியில் தான் காலை பொழுதே விடிகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 4லிருந்து 5 முறையாவது காபியை குடிக்கிறோம். பால் கலக்காத பிளாக் காபியை குடிப்பதால் பெரும் நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காபியில் உள்ள அதிகளவு காஃபைன் புற்றுநோய்க்கு எதிராக போராடும். இதனால் உடல் எடையும் குறைவதாக உடற்கூறு வல்லுனர்கள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

பிளாக் காபி என்பது காபி பிரியர்களுக்கு மிகவும் பிரியமான பானமே. இதனால் அவர்கள் உடல் ஆரோக்கியமும் மேம்படும். இது ஒரு உடனடி பவர் பூஸ்டராக செயல்படுவதோடு புற்றுநோய், இருதய நோய்கள், நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களையும் தடுக்க வல்லது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து உடலில் உள்ல கொழுப்பை எரித்து எடை இழப்பிற்கும் நன்மைகளைச் சேர்க்கிறது.

சர்க்கரை, பால், கிரீம் சேர்க்கைகள் இல்லாமல் கருப்பு காபியை குடிக்க பரிந்துரை செய்கின்றனர் ஊட்டச்சசத்து நிபுணர்கள். கருப்பு காபி பசியை கட்டுப்படுத்துகிறது . அதிக கலோரிகளை எரித்து உடலை சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் இயங்க வைக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது.சர்க்கரை சேர்த்தால் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து நம்மை அடிமைப்படுத்தி விடும்.