பூண்டு ஒரு சிறந்த மருந்து. இதன் மருத்துவ குணம் பல்வேறு நோய்கள் வரமால் தடுக்கும். அதிகளவு பூண்டு உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.ஒருவரின் உடலை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்காமல் இருப்பதால் அவரிடம் ஒரு வித துர்நாற்றம் வீசும். ஆனால் இது சுகாதார சீர்கேடால் மட்டும் அல்ல, பூண்டும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.உடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்களை பூண்டு வழங்குகிறது.
ஆகவே உங்களுக்கு பிடித்தமான பூண்டு வாசனையுடன் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது தவறாமல் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.அதோபோல் தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.
உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த பூண்டும், தக்காளியின் சூப்பர் தொடர்ந்து சாப்பிட்டால் என்ன பலனை பெறலாம் என்று பார்ப்போம்
பூண்டின் சில பற்களை எடுத்து, தோல் நீக்கி அதன்பிறகு அதனை நசுக்கி உடன் தக்காளி, தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு பூண்டு தக்காளி சூப் தயார்.இந்த பூண்டு தக்காளி சூப்பை தினமும் குடித்து வந்தால் நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்ககளுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்.
0 Comments