மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்): இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறலாம். தடைகள் அனைத்தையும் தகர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை மாறும். பணவரவு நிதானமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். மற்றவர்கள் உங்கள் மேல் கொண்டிருந்த கோபம் அகலும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.
கடுமையான பணிச்சுமை ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கோபத்தை குறைப்பது நன்மை தரும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணக்கமான சூழலை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
பரிகாரம்: குமரனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.
0 Response to " மேஷம் - இந்த வார ராசிபலன் (மே 23 முதல் மே 29 வரை)"
Post a Comment