ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்): இந்த வாரம் தேவையற்ற வீண் படபடப்பு ஏற்படலாம். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிப்பது நன்மை தரும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். சுபச் செலவுகள் உண்டாகும். வாகனங்களை இயக்கும் போது நிதானம் தேவை. பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருள் சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற வீண் குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
பரிகாரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி மஹாலக்ஷ்மியை வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.
0 Response to "ரிஷபம் - இந்த வார ராசிபலன் (மே 23 முதல் மே 29 வரை)"
Post a Comment