மிதுனம் - இந்த வார ராசிபலன் (மே 23 முதல் மே 29 வரை)

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்): இந்த வாரம் வீண் மனக்கவலை நீங்கும். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். 

ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். வியாபார செலவுகள் அதிகரிக்கும்.

தொழிலை விரிவுபடுத்துவதற்கான செயலில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு சுபச்செலவு கூடும். 

சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் மனதில் போட்டு வைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் சரியான முறையில் செய்ய முடியும். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

பரிகாரம்: நரிசிமம்ருக்கு பானகம் நிவேதனம் செய்து சேவித்து வர மனகுழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.

0 Response to "மிதுனம் - இந்த வார ராசிபலன் (மே 23 முதல் மே 29 வரை)"

Post a Comment