சிம்மம் - இந்த வார ராசிபலன் (மே 23 முதல் மே 29 வரை)

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): இந்த வாரம் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். புதிய வீடு வாகன சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. 

கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு எதிலும் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினருக்கு பண தேவை உண்டாகும். 

அரசியல்வாதிகள் மனதில் இருந்து வந்த கலக்கம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

பரிகாரம்: சிவனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

0 Response to "சிம்மம் - இந்த வார ராசிபலன் (மே 23 முதல் மே 29 வரை)"

Post a Comment