'அலைபேசி செயலி மூலம், திண்டுக்கல்லில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தலாம்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 21 ஆயிரத்து 200 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
இம்மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் மற்றும் 'வாட்ஸ் ஆப்' வழியாக வினாத்தாள் அனுப்பி பாட வாரியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.'வாட்ஸ் ஆப்' வழியாக விடைத்தாள்களை பெற்று மதிப்பீடு செய்வது சிரமம் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து வாட்ஸ் ஆப் வழியாக பெறப்படும் விடைத்தாள்களை 'பி.டி.எப்., பைல்'களாக பதிவிறக்கி, மதிப்பீடு செய்ய கல்வித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.இதற்காக, பிளே ஸ்டோரில் டபிள்யு.பி.எஸ்., ஆபிஸ் (wps office) மற்றும் சோடா (xodo) ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்து, பி.டி.எப்., விடைத்தாள்களை பதிவிறக்கி திருத்தம் செய்து மாணவர்களுக்கு அனுப்பலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து இம்முறையில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்து வருகின்றனர்.
0 Response to "பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்த 'செயலி'"
Post a Comment