ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பாலமுருகன் செய்திக்குறிப்பு:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 5000க்கும் அதிகமான இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கல்லுாரி இறுதி ஆண்டு பயிலும் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 28 வரை(எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 33, ஓ.பி.சி., பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 31).இத்தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறும் நோக்கில் விழுப்புரம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவசமாக இணைய வழியில் வரும் 19ம் தேதி முதல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்து வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் https://chat.whatsapp.com/LiaoPH8lzex216RtJZwuDA என்ற வாட்சாப் லிங்கை பயன்படுத்தி தங்கள் பெயரை அனுப்பி பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Response to "வங்கியில் 5000க்கும் அதிகமான இளநிலை உதவியாளர் பணி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி - விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் அறிவிப்பு"
Post a Comment