தேசிய கல்விக்கொள்கை ஆலோசனை குறித்து, மத்திய அமைச்சருக்கு மாநில கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடிதம்

கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்த தேசிய கல்வி கொள்கை, 2021 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், அதை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நாளை காணொலி காட்சி வாயிலாக இக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர். அக்கூட்டத்தில் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது, கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைக்க தயாராக உள்ளோம் என்றும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித் துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 Response to "தேசிய கல்விக்கொள்கை ஆலோசனை குறித்து, மத்திய அமைச்சருக்கு மாநில கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடிதம்"

Post a Comment