மருத்துவர்கள், செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை அதிகரித்துள்ளது. 

அரசு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், 35 வயதிற்கு மிகாமல் உள்ள எம்.பி.பி.எஸ்., மற்றும் பட்டய மேற்படிப்பு முடித்த மருத்துவர்கள், 12 பேர், தகுதி வாய்ந்த செவிலியர்கள், 20 பேர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம். கிருஷ்ணகிரி இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் கல்விச் சான்றுகளுடன் வரும், 15 அன்று நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு, 9965408870 என்ற எண்ணிலும், krishnagiri.jdhs1@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி, இரண்டு தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

0 Response to "மருத்துவர்கள், செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் விண்ணப்பிக்கலாம்"

Post a Comment