இ-பதிவு தேவையில்லை ; முதல்வருக்கு நன்றி!

மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் ,பத்திரிகை ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய ,மாநில அரசுப் பணியாளர்கள், தலைமைச் செயலாளர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்வதற்கு அடையாள அட்டை போதுமானது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்கூறியவைகள் பணி நிமித்தமாக செல்லும் போது வாகன தணிக்கை இடங்களில் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு இபதிவு கட்டாயமில்லை. இவர்கள் அனைவரும் அனைவரும் தங்களது அடையாள அட்டையில் எளிதில் பார்க்கும் வண்ணம் வெளிப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வருக்கு நன்றி. நமது கோரிக்கையை ஏற்று பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை போதுமானது என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவுக்கு நன்றி.

தமிழக முதல்வர் பார்வைக்கு சென்ற உடன் நடவடிக்கை தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்கள் அனைவரின் சார்பில் நன்றி. பத்திரிகையாளர்கள் இதை தவறாக பயன் படுத்த வேண்டாம். அனாவிசயமாக வெளியில் வருவது தவிர்க்கவும். அதேவேளையில் காவல்துறையினர் அடையாள அட்டை காட்ட சொன்னால் தயங்காமல் அவர்களுக்கு காட்டி ஒத்தழைப்பு தர வேண்டும். 

நமக்காக அரசு எடுத்துருக்கும் முயற்சிக்கு நாம் முன் உதாரணமாக திகழ வேண்டும். வீண் வாக்குவாதங்கள் கூடாது. முக கவசம் , ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்திருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.

0 Response to "இ-பதிவு தேவையில்லை ; முதல்வருக்கு நன்றி!"

Post a Comment