தேவையான பொருட்கள்

ஆல இலை (உலர்ந்தது) - அரைக் கிலோ

வெந்தயம். - 100 கிராம்

நாவல் கொட்டை. - 100 கிராம்

நெல்லி வற்றல். - 100 கிராம்

மஞ்சள். - 100 கிராம்

படிகார பற்பம். - 50 கிராம்

செய்முறை

முதலில் தேவையான அளவு ஆல மர இலையை எடுத்து எடுத்து சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் நன்கு உலர வைத்து மேற்கூறிய அளவு எடுத்துக் கொள்ளவும். வெந்தயம் , நெல்லி வற்றல், நாவல் கொட்டை மற்றும் மஞ்சள் அனைத்தையும் எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

பின்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள தூளை ஒன்றாக கலந்து அதனுடன் படிகார பற்பத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஒன்றாக கலந்த வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு : நாவல் கொட்டை தூள், நெல்லி வற்றல் மற்றும் படிகார பற்பம் நாட்டுமருந்துக்கடையில் கிடைக்கும்.

பயன்கள்

இந்த சூரணம் நாட்பட்ட சர்க்கரை குறைபாட்டினால் துன்பப்படுபவர்களுக்கு உதவும் அருமருந்தாகும்.

மேற்கூறிய இந்த சூரணத்தை தயார்செய்து காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சாப்பாட்டிற்கு முன்பு சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com