COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- பொது செய்திகள்
- கொரோனாவுக்கு எதிராக பலன் தரும் கபசுரக்குடிநீர்! ஆயுஷ் அமைக்கம் பரிந்துரை!!
கொரோனாவுக்கு எதிராக பலன் தரும் கபசுரக்குடிநீர்! ஆயுஷ் அமைக்கம் பரிந்துரை!!
தமிழ்க்கடல்
அறிகுறி இல்லாத, லேசான, மிதமான கொரோனா தொற்றை கபசுரக் குடிநீர் குணப்படுத்துவது ஆராய்ச்சியில் உறுதியானதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா முதல் அலையின் போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து லேசான, மிதமான தொற்று இருப்பவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்தமருந்துகளால் ஆயிரக்கணக்கானோர் தொற்றில் இருந்து மீண்டனர் .
இந்நிலையில் , கொரோனா 2 ஆவது அலை தீவிரமடைந்து வருவதால் , சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் . இதையடுத்து , சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலை , அறிவியல் கல்லூரியில் 240 படுக்கைகள் , மீனம்பாக்கம் ஏ . எம் . ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை தமிழக அரசு அமைத்தது .
இதேபோல , மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தாம்பரத்தில் செயல்படும் தேசிய சித்த நிறுவனமருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது . மேலும் 12 மாவட்டங்களில் தமிழக அரசு சித்த மருத்துவ மையங்களை அமைக்க உள்ளது .
இந்நிலையில் , அறிகுறி இல்லாத , லேசான மற்றும் மிதமான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கபசுரக் குடிநீர்மூலம் குணமடைவது , மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்நடத்திய ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது . இதேபோல , ஆயுஷ் -64 என்ற ஆயுர்வேத மருந்து தொற்றைக்குணப்படுத்துவதும் , மத்திய ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள் ளது .
இந்த இரண்டு மருந்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , தேவையானவர்களுக்கு கொடுக்கவும் மாநில அரசுகளுக்கு , மத்தியஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "கொரோனாவுக்கு எதிராக பலன் தரும் கபசுரக்குடிநீர்! ஆயுஷ் அமைக்கம் பரிந்துரை!!"
Post a Comment