பலாப்பழம் மருத்துவ குணங்கள் மிகுந்து இருக்கின்றது. வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும்.
முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படும் பலாப்பழம் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணை கவரும் வண்ணத்திலும் இருக்கும்.
வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் பலாபழமரத்தின் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.
பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும். உடலும் ஊட்டம் பெறும்.
COMPETITIVE EXAM STUDY MATERIALS
பலாப்பழம் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "பலாப்பழம் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது"
Post a Comment