இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய உணவை நின்று கொண்டு உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு உணவுகங்ளில் நின்றுகொண்டு சாப்பிடுவதை ஊக்குவித்து வருவதால் அந்த பழக்கம் தற்பொழுது வீட்டிலும் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் திருமணங்களில் கூட பஃபே சிஸ்டம் என்ற ஒன்றை கண்டுபிடித்து நின்று கொண்டே சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிவிட்டனர். இந்நிலையில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
நின்று கொண்டு சாப்பிடுவதனால் ஏற்படும் ஆபத்து
நாம் நின்று கொண்டே உணவை உட்கொள்வதினால் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் உணர்வின் வேகம் அதிகரிக்கிறது. இதனால் உடலிலுள்ள குடலின் அழுத்தத்தை உண்டாக்கி உடம்பில் செரிமான பிரச்சனை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். மேலும் நாம் நின்று கொண்டு சாப்பிடும் பொழுது உணவு வேகமாக உடற்பகுதிகள் சென்று விடும் காரணத்தினால் நாம் உட்கொள்ளும் உணவு போதுமான அளவுடையதா என்று உங்களுக்கு அறிய வாய்ப்பில்லை.
இதன் விளைவாக நாம் உட்கொள்ளும் உணவானது அதிகம் எடுத்துக் கொள்ள நேரிடும். இதன் காரணமாகத்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் நின்றுகொண்டு சாப்பிட வேண்டாம் என்று பல நேரங்களில் எச்சரிப்பது உண்டு. காரணம் உட்கார்ந்து சாப்பிடுவதனால் நாம் ஆரோக்கியமாக வாழ்வை வாழலாம்.
நாம் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்
வீட்டில் உண்ணும் பொழுது உணவகங்களில் உண்ணும் பொழுது நாம் உட்கார்ந்து உணவை உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும், காரணம் சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் என்பது சீராக இயங்கும். மேலும் தேவையற்ற நேரங்களில் பசி எடுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். நம்முடைய உணவுப் பழக்கத்தினால் தற்பொழுது இருக்கும் தலைமுறையினர் பெரும்பாலான நபர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். வயதானவர்களின் சதவீதத்தை ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறையினர் பெரும்பாலான நபர்கள் பதட்ட நோய் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
0 Response to "நாம் நின்று கொண்டு உணவு சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் பிரச்சனை.!"
Post a Comment