நாகர்கோவில், செப்.5: குமரி மாவட்டத்தில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணையை கலெக்டர் தர் வழங்கினார்.
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தர் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 243 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் தர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தர், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2022-2023-ம் ஆண்டுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் சார்பில் அங்கன்வாடி உதவியாளர் பணியில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு ஆணையினை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சிகளில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) புகாரி (பொ), ஒருங்கிணை குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெயந்தி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கனகலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Response to "10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை கலெக்டர் வழங்கினார்"
Post a Comment