ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ 428 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ 1118.50 ஆக இருந்தது. மாதந்தோறும் இந்த விலையேற்றம் இருந்து கொண்டே இருந்ததால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மானியப்பணமும் சிலருக்கு கிடைப்பதாகவும் பலருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் சிலிண்டரின் விலை ரூ 200 குறைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ 918.50 க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் கோவா மாநில அரசு ஒரு ஜாக்பாட் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் அந்தயோதயா அன்னயோஜனா அட்டைதாரர்களுக்கு ரூ 428 க்கு சிலிண்டர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் ஷிர்பாட் நாயக் ஆகியோர் பனாஜியில் எல்பிஜி சிலிண்டர் நிரப்புவதற்கான முதல்வரின் நிதி உதவித் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தின் அந்தயோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டரில் ரூ 275 மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.
இதுகுறித்து கோவா முதல்வர் பேசுகையில், எல்பிஜி சிலிண்டருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 11,000 மேற்பட்டவர்கள் இந்த அந்தயோதயா திட்டத்திற்கான கார்டுகளை வைத்துள்ளனர். அந்த கார்டுதாரர்களுக்கு உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ரூ 200 மானியத்தையும் கோவா அரசால் வழங்கப்படும் ரூ 275 மானியத்தையும் பெறுவார்கள்.
இதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ 475 மானியத்தில் கிடைக்கும். ரக்ஷா பந்தனை முன்னிட்டு சிலிண்டருக்கு ரூ 200 குறைக்கப்பட்டுள்ள நிலையில் பனாஜியில் 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ 903 மாறியுள்ளது. அது போல் தெற்கு கோவாவில் ரூ 917 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உஜ்வாலா திட்டத்தின் மூலமும் மாநில அரசின் மானியத்தின் மூலம் இனி சிலிண்டரின் விலைரூ 428 க்கு கிடைக்கும் என்றார்.
0 Response to "ரேஷன் கார்டு வைத்திருக்கிறீங்களா? அப்போ அடிக்குது ஜாக்பாட்.. சிலிண்டர் விலை ரூ 428க்கு கிடைக்குமாம்!"
Post a Comment