தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் கொடுக்க தமிழக அரசு தீவிர ஆலோசனை.
2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தீவிரமாக தனது பணியை தொடங்கியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு சார்பில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்டுகிறது, இவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அதே போல எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் தமிழக அரசும் மக்களை கவர சில அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன் படி தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை இலவசமாக வழங்கலாமா என ஆலோசித்து வருகிறது. மேலும் இந்த திட்டத்திற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் கொண்ட பாமாயில் பாக்கெட் 6 கோடி லிட்டர் என கொள்முதல் செய்ய உள்ளதாக தகவல் தெதெரிவிக்கிறது.
தற்போது ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி, கோதுமை அவரவருடைய அட்டை வரம்பைபொறுத்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாமாயில் ஒரு பாக்கெட் ரூ.25, ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments