தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6,244 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று இரவு 11:59 மணியுடன் நிறைவடைகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் இன்று இரவுக்குள் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை வரும் மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/1_2024-Eng.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
0 Response to "TNPSC Group-4 : 6,244 பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாள்.!!"
Post a Comment