மீனத்தில் நுழைந்தார் சூரியன்..3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறையும் சூரிய பகவான் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.

அந்த வகையில் தற்போது சூரிய பகவான் மீன ராசிக்கு மார்ச் 14ஆம் தேதி அன்று செல்கின்றார் இந்த மீன ராசி குருபகவானின் சொந்த ராசியாகும்.

சூரியன் மற்றும் குருபகவான் இருவரும் நட்பு கிரகங்கள் என்ற காரணத்தினால் சூரியபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீன ராசி

சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய உறவுகள் உங்களைத் தேடி வரும்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் அதிகரிக்க போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். சூரியனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கடக ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் செல்கின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை தொடர்பான பயணம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

0 Response to "மீனத்தில் நுழைந்தார் சூரியன்..3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை"

Post a Comment