சோழியன் குடுமி சும்மா ஆடாது
சோழியன் என்பது பிராமண சமுதாயத்தின் ஒரு பிரிவு. பொதுவாக, பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பார்கள். ஆனால், சோழியன் பிரிவை சேர்ந்தவர்கள் மலையாள நம்பூதிரியைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும்படி முன்குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன் பக்கத்தில் அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக இருக்க முடியாது. 'சும்மாடு' என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியை சுருட்டி வைத்துக்கொண்டு அதன் மேல் சுமையை வைத்து தூக்குவார்கள். முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடு போல் ஆகாது. அதாவது சும்மாட்டுக்கு இணையாகாது. அவர்களும் சுமை தூக்கும்பொழுது சும்மாடு வைத்துதான் தூக்க வேண்டும். ‘சோழியன் குடுமி சும்மாடு ஆகாது’ என்பதுதான் இப்படி மருவியுள்ளது.
0 Comments