இது ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகையும் பெருமையையும் காண்பவர்களுடைய பார்வையைப் பொறுத்தே உள்ளது என்பதை விளக்கும் வகையில் அமைந்த பழமொழியாகும். ஆனால், இப்பொழுது நாயைக் காணும்போது அதை அடிப்பதற்கு கல்லை காணோம் என்றும், கல்லைக் காணும் பொழுது நாயை காணவில்லை என்னும் பொருள்பட கூறப்படுகிறது. பைரவரின் வாகனமாக நாயை பார்க்கும்பொழுது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும்போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவும் தெரியும். அதாவது, பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்தே எதுவும் உள்ளது என்பதைக் குறிக்கிறது.