மாமியார் விசாலாட்சி அழைத்தவுடன் நடுங்கியபடி அருகில் சென்றாள் சந்திரிகா.
"இதப்பாரு மூணாவது பொறந்ததும் பொண்ணாப் போச்சு..உன் புருசனுக்கு வற வருமானத்துல இதுக ரெண்டையும் கரை சேர்க்கிறதே கஷ்டம்.
இத கள்ளிப்பால் கொடுத்து நானே கொல்லட்டுமா இல்ல நீயே போய் எங்காவது குப்பை தொட்டியில் போட்டுட்டு வந்துடுறியா" என்று அதட்டினால் மாமியார் பங்கஜம்.
'இல்ல அத்த. நானே போய் குப்பைத்தொட்டியில் போட்டுட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு அந்தத் தெருவில் ஒரு மூலையில் இருக்கும் குப்பைத் தொட்டியை கவனித்தாள் சந்திரிகா.
மெல்ல மெல்ல நெருங்கி அந்தக் குப்பைத் தொட்டியை சென்றடைந்தாள் சந்திரிகா.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் பெண் சீசுவை அந்தக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு திரும்பி, திரும்பி பார்த்தபடி நடந்தாள்.
அதே நேரம். யாரோ ஒருவர் அந்தக் குப்பைத் தொட்டியில் கோழி இறைச்சிக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவரைக் கவனித்தாள்.
கொட்டப்பட்ட கோழி இறைச்சிக் கழிவின் வாசனையை மோப்பம் பிடித்த தெரு நாய்கள் மூன்றும் அந்தக் குப்பைத் தொட்டியை நோக்கி ஓடுவதை கவனித்து விட்டாள். துடித்துப் போனாள்.
குப்பைத்தொட்டியை நோக்கி ஓடினாள். அருகில் கிடந்த குச்சியை எடுத்து நாய்களை விரட்டி விட்டு தன்னுடைய பெண் சிசுவை குப்பைத்தொட்டியில் இருந்து வெளியே எடுத்தாள்.
அந்தப் பெண் சிசுவின் மேல் கோழியின் ரத்தம் படிந்து இருப்பதை கவனித்த அவள், தன் சேலை முந்தானையால் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
"என் செல்லமே, என் ராசாத்தி, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உன்னை நான் காப்பாத்துறேன்" என்று புலம்பியவாறு அந்தப் பெண் சிசுவை மாறி, மாறி முத்தமிட்டாள்.
மறுநாள் காலையில் எலே மாரிமுத்து. உன் பொண்டாட்டி ரெண்டு பொம்பள பிள்ளைகளையும் கூட்டிட்டு கைக்குழந்தையையும் தூக்கிக்கிட்டு எங்கேயோ போயிட்டாடா" என்று தெருவே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தாள் மாமியார் விசாலாட்சி.
0 Comments