அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது, 59 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ரத்து செய்யப்படலாம்' என, தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், விருப்ப இடமாறுதல் வழங்கப்படும். இதற்காக, மாநில அளவில், ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.
இந்த கவுன்சிலிங், ஆண்டுதோறும் புதிய கல்வி ஆண்டு துவங்கும் முன்,
மே மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு, ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் திறப்பும், புதிய கல்வி ஆண்டு பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கும், அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயது, 59 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இந்த ஆண்டு ஓய்வு பெறவில்லை.
அவர்கள் ஓய்வு பெறுவது ஓராண்டு தள்ளி போயுள்ளது. அதனால், காலியிடங்கள் ஏற்படவில்லை. இதன் காரணமாக, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கை தள்ளி வைக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இவ்வாண்டு ரத்து?
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இவ்வாண்டு ரத்து?
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
- கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற் கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிப்பு
- அரசு கலை கல்லூரி மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
- அனைத்து பாடத்துக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளில் 114 புதிய இடங்களுக்கு அனுமதி
- 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5,144 மாணவர்கள் ஆப்சென்ட் - விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இவ்வாண்டு ரத்து?"
Post a Comment