பிளஸ் 1 'அரியர்' மாணவருக்கு சிக்கல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு அமலானபோது, பாடங்களில் தோல்வியை தழுவினாலும், உயர்கல்வி போல், அரியர் தேர்வெழுத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டிலேயே, பிளஸ் 2 தேர்வும் எழுதலாம்.கடந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியை தழுவியோருக்கு, உடனடி பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 

ஆனால், அத்தேர்விலும் தோல்வியை தழுவியோருக்கு, செப். மாதம் துணை பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது இந்தாண்டிலும், பிளஸ் 1 பொதுத்தேர்வு அறிவிக்காததால், அரியர் மாணவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், '' கொரோனா பரவுவதால், சில மாணவர்கள், பிளஸ் 1 உடனடி பொதுத்தேர்வில் பங்கேற்கவில்லை. 

இந்த மாணவர்கள், நடப்பாண்டிலும் அரியர் வைத்த பாடங்களில் தேர்வெழுத முடியாத நிலை உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்ததும், அரியர் மாணவர்களுக்கு, உடனடி பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும். இல்லாவிடில், இவர்கள் உயர்கல்வியில் சேர்வது கேள்விக்குறியாகிவிடும்,' என்றனர்.

0 Response to "பிளஸ் 1 'அரியர்' மாணவருக்கு சிக்கல்"

Post a Comment