பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் சரிபார்ப்பு பணி, அனைத்து பள்ளிகளிலும் துவங்கியுள்ளது.அரசு தேர்வுகள் இயக்ககம், பொதுத்தேர்வுக்கு தேவையான விடைத்தாள்கள், வரைகட்டத்தாள், வரைபடங்கள் மற்றும் இதர எழுதுபொருட்களை, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தேர்வுக்கான எழுது பொருட்கள், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்ட நிலையில், விடைத்தாள்கள் சரிபார்ப்பு பணி துவங்கியது. விடைத்தாள் தைக்கும் பணிக்கு ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கூடுதல் விடைத்தாள்கள், வரைபடம், வரைக்கட்டத்தாள் சேர்த்து ஒரே விடைத்தாள் புத்தகமாக தைக்க வேண்டும்.
ஓரிரு நாட்களில் தேர்வு மையங்களிலே தையல் இயந்திரத்தின் வாயிலாக, காட்டன் நுால் கொண்டு தைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விடைத்தாள் சரிபார்ப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Response to "விடைத்தாள் சரிபார்ப்பு பணி துவங்கியது"
Post a Comment