மேஷம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளிடம் வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். எதிர்பாராத உதவி கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் லாபத்தை அடையலாம்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று உங்களுக்கு சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களில் வேற்று மொழி நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத செலவுகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பண புழக்கம் அதிகமாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.
தனுசு
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை சமாளிக்கலாம். பெரியவர்களின் அறிவுரை வியாபார வளர்ச்சிக்கு உதவும்.
கும்பம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- தெரிந்து கொள்வோம்
- இன்றைய ராசிபலன் (22.05.2021)
இன்றைய ராசிபலன் (22.05.2021)
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "இன்றைய ராசிபலன் (22.05.2021)"
Post a Comment