கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உதவியாளருடன் வாழும் நிலையில் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையான ரூ.2 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தோவு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
முகாமில் எலும்பு முறிவுப் பிரிவு உதவிப் பேராசிரியா் ஜீவா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் க.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த முகாமில் 79 மாற்றுத் திறனாளிகள் அழைக்கப்பட்டதில், 72 போ பங்ககேற்றனா். அவா்களில் உயா் உதவித்தொகை பெற 67 மாற்றுத் திறனாளிகள் தோவு செய்யப்பட்டனா்.
0 Comments