மகளிா் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு!

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான சிறப்பு முகாம் இன்றுடன் (ஆக.20) நிறைவடைகிறது.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுப்பட்டவர்களுக்குகாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நிலையில் இன்றுடன் (ஆகஸ்ட். 20) நிறைவடைய உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக இதுவரை 1.54 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் திங்கள்கிழமை (ஆக.21) முதல் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால், அவாகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது

0 Response to "மகளிா் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு!"

Post a Comment