பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் கடிகாரங்கள் சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும். வீட்டில் இருக்கும் கடிகாரங்கள் திடீரென ஓடாமல் நின்று விட்டால் வாழ்க்கையும் நின்று விடும் என முன்னோர்கள் தெரிவிப்பார்கள்.
எந்த வேலையும் நடக்காது. வெற்றி கிடைக்காது. வாழ்க்கையில் நிம்மதி போன்றவை இருக்காது என கருதுவார்கள். எனவே வீட்டு சுவரில் உள்ள கடிகாரங்கள் ஓடவில்லை என்றால் அதனை உடனடியாக மாற்ற வேண்டும்.
வீட்டில் சுவர் கடிகாரங்களை தெற்கு நோக்கி தொங்கவிடக்கூடாது. கிழக்கு, மேற்கு, வடக்கு இந்த மூன்று திசைகளில் தொங்கவிடலாம்.
தெற்கு நோக்கி தொங்கவிட்டால் வீட்டில் நமக்கு ஆகாது என வாஸ்து நிபுணர்கள் தெரிவிப்பார்கள். வீட்டின் நுழைவு வாயிலில் சுவர் கடிகாரத்தை தொங்கவிடக் கூடாது. அது எதிர்மறை ஆற்றலை கொடுக்கும்.
இந்த எதிர்மறை ஆற்றல் வீட்டில் நிம்மதி இல்லாமல் கடன் பிரச்சனை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் கடிகாரத்தை தொங்கவிடக் கூடாது.
அதேபோல் உடைந்த கடிகாரம் வீட்டில் இருக்கக் கூடாது. வேலை செய்யாத கடிகாரம் சுவரின் மாட்டி இருக்கக் கூடாது. உடைந்து போய் அல்லது வேலை செய்யாமல் இருக்கும் கடிகாரத்தை வீட்டில் வைத்திருந்தால் உயிர் போகும் அளவிற்கு கூட பிரச்சனை வந்து சேரும். எனவே ஒருபோதும் உடைந்த கடிகாரம், வேலை செய்யாத கடிகாரங்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது.
0 Response to "வாஸ்து முறைகள்: வீட்டில் கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாத திசைகள்.!"
Post a Comment