COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் நிவாரண உதவி
மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் நிவாரண உதவி
தமிழ்க்கடல்
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் ,தொட்டியபட்டி , ஊ.ஒ.தொ. பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் காரணமாக , வேலையின்மையால் அவதிப்படுவதாக பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பள்ளியில் பயிலும் 69 மாணவர்களின் பெற்றோர்களுக்கும் , அரிசி, பருப்பு உள்ளிட்ட 9 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பை ஒன்றும், காய்கறிகள் உள்ளிட்ட பை ஒன்றும் , கைகழுவ சோப்கள், மற்றும் மாஸ்க்குகள் , மாணவ மாணவிகளுக்காக பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட ரூ 32,500 மதிப்புள்ள பொருட்களை ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டி கரூர் அவர்களால் வழங்கப்பட்டது. தலைவர் திரு சூரியநாராயணா, பெரியசாமி , தினேஷ், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கினார்கள், விழாவில் சமூக இடைவெளியுடன் பெற்றோர்களை நிற்க வைத்து , கைகளை சுத்தம் செய்ய சனிடை சர் போடப்பட்டு மாஸ்க் அணிவிக்கப்பட்டு, பள்ளியன் தலைமையாசிரியர் கோ. மூர்த்தி விழாவை ஏற்பாடு செய்து கொரோனா தொற்று விழிப்புணர்வு உரையாற்றினார்.விழாவில் கவுன்சிலர் இளங்கோ, சிவசுப்பிரமணியம், கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் நிவாரண உதவி"
Post a Comment